Direct naarhoofdmenu / zoekveld
Home / Tamil/ தமிழ்

Tamil/ தமிழ்

 

அனைவரின் நலத்திற்காக புலம் பெயர்தல்

 

புலம் பெயர்தலுக்கான அனைத்துலக நிறுவனம் (IOM - the International
Organisation for Migration).- உலகம் முழுவதும் உள்ள புலம் பெயரும் நபர்களுக்கு உதவி செய்யும் ஒரு நிறுவனம்.


நெதர்லாந்தில் உள்ள ஐ. ஓ. எம், நெதர்லாந்தின் உள்ளே வரும் போதும், நாட்டை விட்டு வெளியே செல்லும் போதும், புலம் பெயர்பவர்களுக்கு, அவருடைய பூர்வீக நாட்டிற்கு செல்வதற்கான உதவி அல்லது, அவருடைய பூர்வீக நாட்டில் தற்காலிகமாக உறைவிடத்திற்கு உதவி செய்வது போன்ற, தேவையான உதவிகளை, செய்து வருகிறது.


மேலும், தொழிலாளர் புலம் பெயர்தல், புலம் பெயர்தல், உடல் நலன், மற்றும் மனிதர்களை கடத்தப்படுவதை எதிர்ப்பது போன்ற செயல்பாடுகளிலும் கவனம் செலுத்துகிறது.

 

புலம் பெயர்பவர்கள்... ஐ. ஓ. எம் ஐ பின்வரும் உதவிகளுக்கு தொடர்பு கொள்ளலாம்.

 

  • அவர்களுடைய பூர்வீக நாட்டிற்கு தன்னார்வ அடிப்படையில் திரும்பும் நிலையில் ஆலோசனை
  • அவர் பூர்வீக நாட்டிற்கு திரும்பும் போது அவருக்கு தேவையான ஆதரவு
  • அயல் நாட்டில் பிடிப்பில் இருந்து தன்னார்வ அடிப்படையில் வெளியேற மத்தியஸ்தம் செய்தல
  • பூர்வீக நாட்டில் சமூக நிலையை அடைய ஆதரவு (பொருள் உதவி அல்லது / மற்றும் பிற உதவிகள்)
  • பூர்வீக நாட்டில் வளர்ச்சிக்கு உதவும் வகையில் தற்காலிக உதவிகள்
  • தனி நபர் தொழில் திறமைகளை, பூர்வீக நாட்டின் கட்டமைப்பு பணிகளுக்கு வழியமைத்தல்
  • குடும்பம் ஒன்று சேர்தல் மற்றும் மறுவாழ்வமைக்கும் அகதிகள் என்ற அடிப்படையில் வரவேற்பும், வழிகாட்டுதலும்.
  • அனுமதி விதிகளை பூர்த்தி செய்யும் நிலையில், ஒரு மூன்றாவது நாட்டில் இடம் பெயறும் போது, அவருக்கான போக்குவரத்து வசதிகளை செய்து தருவது.
  • ஷிப்போல் பன்னாட்டு விமான நிலையத்தில், வழியில் உள்ள விமான நிலையங்களிலும், சேர வேண்டிய நாட்டின் விமான நிலையங்களிலும் தேவைப்படும் பயண உதவிகளுக்கு.

 

ஜெனிவாவை தலைமையிடமாக கொண்ட ஐ. ஓ. எம் 1951 இல் தொடங்கப்பட்டு, உலகம் எங்கிலும் 120 உறுப்பினர் நாடுகளை கொண்டுள்ளது. ஐ. ஓ. எம் ஒரு தனித்த, பன்னாட்டு அமைப்பு, அதனை நெதர்லாந்து அலுவலகம், உலகில் உள்ள பல அலுவலகங்களையும் ஒன்றிணைத்து, புலம் பெயர்தல் குறித்த ஒன்று சேர்ந்த தகவல்களை வழிமுறைகளாக மாற்றி வருகிறது.

 

Infosheet REAN Tamil

 

Aan de teksten op deze website kunnen geen rechten worden ontleend
Zoeken
Uitgebreid zoeken